Jana Nayagan Box Office : நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் ஜன நாயகன் வசூல்!

 
Jana nayagan

6 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'பீஸ்ட்' படத்துக்கு பிறகு 'தளபதி' விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள புது படம் தான் 'ஜன நாயகன்'.

இதை அஜித்தின் 'வலிமை' இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் பல எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படம் கமிட்டாகும்போது :தளபதி' விஜய்-யாக இருந்தவர், இப்போது தமிழ்நாட்டின் CM-ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

படத்தில் 'தளபதி'-யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கிறார் மமிதா பைஜு. பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் இதன் வசூல் குறைந்து கொண்டே போகிறது. கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.246.07 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

From Around the web