Jana Nayagan Box Office : 8-வது நாளில் வெறும் 4.62 கோடி வசூலித்த ஜன நாயகன்!

 
Jana Nayagan

8 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் 'பகவந்த் கேசரி'. 

இதில் கதாநாயகனாக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இதை பிரபல இயக்குநார் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். இப்படம் டோலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது.

இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றி தான் 'ஜன நாயகன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 'KVN புரொடக்ஷன்ஸ்: நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஹீரோவாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ளார்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தில் முக்கிய வேடங்களில் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். தற்போது, இந்த படம் கடந்த 8 நாட்களில் உலக அளவில் ரூ.260.25 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web