Jana Nayagan Box Office : ஜன நாயகனுக்கு போய் பாக்ஸ் ஆபிஸில் இப்படி ஒரு நிலைமையா?
9 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. அரசியல் என்ட்ரிக்கு முன் விஜய்யின் கடைசி படத்தை இயக்க பல இளம் இயக்குநர்கள் கதை சொன்னார்கள்.
ஹெச்.வினோத்தே முதலில் வேறு ரெண்டு கதைகளை தான் சொன்னார். ஆனால், விஜய்யோ பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படமான 'பகவந்த் கேசரி'-யை தான் சொல்வது போல் மாற்றம் செய்து எடுத்துக் கொடுக்க அன்பு கட்டளையிட்டார்.
வினோத்தும் விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு, அதுவும் கடைசி படம் என்பதால் ஓகே சொல்லி கதையில் விஜய் சொன்ன விஷயங்களையும், தன்னுடைய ஸ்டைலில் சில விஷயங்களையும் சேர்த்து எடுத்த படம் தான் 'ஜன நாயகன்'. படம் வெளியாவதற்குள் விஜய் தமிழ்நாட்டின் CM ஆகி விட்டார்.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூ.268.45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
