ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வரும் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் 'அடியே என் பூந்தேனே' பாடல்!

 
Adiye en Poonthene song

கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வந்த 'தளபதி' விஜய் தான் இப்போது தமிழ்நாட்டுக்கே முதல்வராக இருக்கிறார். இவர் தனது அரசியல் என்ட்ரிக்கு முன்பே 'ஜன நாயகன்' தான் கடைசி படம் என்று சொல்லிவிட்டார்.

தேர்தலுக்கு முன்பே வரவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி தவித்தது. சமீபத்தில், தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து A சான்றிதழ் கிடைத்தது.

படத்தை வருகிற ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், மமிதா பைஜு விஜய்யின் வளர்ப்பு மகளாகவும் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆல்ரெடி நான்கு பாடல்கள் வெளியாகி விட்டது. தற்போது, 'அடியே என் பூந்தேனே' என்ற புதிய பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.

From Around the web