திரையரங்கில் விஜய்யின் 'ஜன நாயகன்'-ஐ கொண்டாடிய பெங்களூர் ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ!
ஹெச்.வினோத் இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடித்திருக்கும் புதிய படமான 'ஜன நாயகன்' இந்த ஆண்டு (2026) ஜனவரி 9-ஆம் தேதியே வெளி வர வேண்டியது.
சென்சார் சிக்கலில் சிக்கி இவ்ளோ தாமதமாகி விட்டது. அதற்குள் அப்போது முன்னணி நடிகராக மட்டுமே இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார்.
இதனால் ஆல்ரெடி இருந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடி விட்டது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகெங்கும் விஜய்-க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
One last FDFS…
— KVN Productions (@KvnProductions) July 23, 2026
Thank you Bangalore for your love ♥️#JanaNayaganFDFS
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries pic.twitter.com/8vAYOnnYz3
அதை நிரூபிக்கும் வகையில் தான் இப்போது 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'KVN புரொடக்ஷன்ஸ்' ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இவ்வீடியோ பதிவில் பெங்களூரில் உள்ள ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தை பார்த்து ரசித்து கொண்டாடி வருகிறார்கள்.
