விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் சென்சார் ரிசல்ட் & RUNTIME என்ன தெரியுமா?... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Updated: Jul 9, 2026, 20:11 IST
விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார். இவர் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' படத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டிய படம், சென்சார் போர்டு பஞ்சாயத்தால் தான் தாமதமாகிக் கொண்டே போனது.
இந்நிலையில், இன்று சென்சார் போர்டு இதன் சான்றிதழை வெளியிட்டிருக்கிறது. அதில் இப்படம் A சான்றிதழ் வாங்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், படத்தின் RUNTIME : 3 hrs 3 mins 11 secs என்று தெரியவந்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இதில் விஜய்யுடன் சேர்ந்து பாபி தியோல், மமிதா பைஜு, கெளதம் மேனன், பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
