விஜய்யின் 'ஜன நாயகன்'-க்கு 'A' சான்றிதழ் கொடுத்த சென்சார் குழு... ரிலீஸ் தேதியை லாக் செய்த 'KVN'!

 
Vijay jana nayagan

கோலிவுட்டின் 'தளபதி'-யாக கெத்து காட்டி வந்த நம்ம விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார். இருப்பினும் இவரது ரசிகர்களுக்கு, இனிமே விஜய்யை திரையில் பார்க்க முடியாதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

தற்போது, விஜய் நடித்துள்ள கடைசி படமான 'தளபதி 69' அதாவது 'ஜன நாயகன்' ரிலீஸ் குறித்து ரெண்டு செய்திகள் வந்திருக்கிறது. சென்சார் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட இதற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம்.

மேலும், படத்தை வருகிற ஜூலை 16-ஆம் தேதி வெளியிட இதன் தயாரிப்பு நிறுவனமான 'KVN புரொடக்ஷன்ஸ்' முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, நரேன், பிரியாமணி, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், சுனில், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

From Around the web