Jana Nayagan Box Office : விஜய்யின் 'ஜன நாயகன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Jul 24, 2026, 05:53 IST
'ஜன நாயகன்' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. ஒரு வழியாக விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' பல்வேறு பிரச்சனைகளை கடந்து நேற்று (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
இப்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 'துணிவு' இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தளபதியின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜு நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.78.27 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
