கேரளாவில் இதுவரை ஜன நாயகன் செய்துள்ள வசூல் இவ்ளோவா?

 
Jana Nayagan

கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதேபோல் தான் அங்கு 'தளபதி' விஜய்-க்கும்.

இவரது படங்கள் அங்கு வெளியானால் FDFS பார்த்து ரசித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இதனால் கேரளாவிலும் விஜய் படங்கள் அதிக வசூல் செய்வது வழக்கம்.

கடந்த வாரம் ஜூலை 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' படம் வெளியானது. இந்த படத்தை 'வலிமை' இயக்குநர் வினோத் தான் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடித்திருக்கிறார்கள். இப்படம் இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.14.25 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web