கேரளாவில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்'!

 
Jana Nayagan

தமிழ்நாட்டில் 'தளபதி' விஜய்-க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் தான் கேரளாவிலும். விஜய் நடித்திருக்கும் புதிய படம் 'ஜன நாயகன்'.

இப்படம் நேற்று (ஜூலை 23) தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருக்கும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், அங்கையும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இதனால் கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியுள்ளார் 'தளபதி'. கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த 'SSR எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் இதன் முதல் நாள் வசூல் ரூ.5.80 கோடி (கேரளாவில் மட்டும்) என்று அறிவித்திருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

From Around the web