விஜய்யின் 'ஜன நாயகன்'-ல் நடித்தவர்கள் & பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம்?

 
Jana Nayagan

தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. சினிமா கேரியரில் 'தளபதி'-யின் கடைசி படம் இதுவே.

ஆகையால், இவரின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் தான். இன்னொரு பக்கம் நாளை (ஜூலை 23-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகப்போகும் இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க டிக்கெட் எடுத்து கையில் வைத்திருக்கிறார்கள்.

Jana nayagan cast

கடைசியாக விஜய்யை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். தற்போது, இப்படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம் எவ்ளோ?-ன்னு பார்ப்போம்.

ஹீரோ விஜய்க்கு ரூ.220 கோடியாம். இதை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ரூ.25 கோடியாம். தளபதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடியாம். விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜுவிற்கு ரூ.60 லட்சமாம். 

H Vinoth anirudh

வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோலுக்கு ரூ.3 கோடியாம். சூப்பரான பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு ரூ.13 கோடியாம். இதர நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்களின் மொத்த சம்பளம் ரூ.8 கோடியாம்.

From Around the web