'கூலி' வசூலில் பாதிதானா?... முதல் நாளே ஜன நாயகனுக்கு இப்படி ஆயிடுச்சே!
பெரிய எதிர்பார்ப்பில் நேற்று (ஜூலை 23) வெளியான படம் 'ஜன நாயகன்'. விஜய்யின் கடைசி படம், அதுவும் தற்போதைய தமிழக முதல்வரின் படம் என இந்த இரண்டு விஷயங்கள் அதுக்கு முக்கிய காரணங்கள்.
ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் தான் இசை. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் முக்கிய வேடங்களில் வலம் வந்துள்ளனர்.
இப்படம் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'கூலி' பட வசூலை முறியடித்து விடும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.78.27 கோடி என்று தெரியவந்துள்ளது.
'கூலி' படமோ முதல் நாளே உலக அளவில் ரூ.151.14 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஜன நாயகனின் வசூல் இப்படி ஆயிடுச்சே என்று விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
