விஜய்யின் 'ஜன நாயகன்' இந்த தேதியில் தான் ரிலீஸாகப்போகுது... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கனடா விநியோகஸ்தர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜோசப் விஜய். தமிழ் சினிமாவில் இதுவரை இவர் நடித்த 68 படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.
இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 69-வது படம் தான் 'ஜன நாயகன்'. விஜய் அரசியலில் நுழையும்போதே இது தான் திரையுலகில் தனது கடைசி படமாக இருக்கும் என தெளிவாக சொல்லிவிட்டார்.
ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். நெகட்டிவ் ரோலில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார்.
🔥 Finally! Our Own Thalapathy Vijay is ready to set the big screen on fire with #JanaNayagan💥
— York Cinemas (@yorkcinemas) July 8, 2026
🇨🇦 Canada Release by York Cinemas
🎬 Igniting screens from July 24.
Get ready for the ultimate theatrical celebration.
Stay tuned for tickets 🎫#thalapathyvijay #yorkcinemas pic.twitter.com/CcyiZAZqUp
விஜய்யின் வளர்ப்பு மகளாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருக்கிறார். தற்போது, இந்த படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி தான் வெளியாகப்போகிறது என்று கனடாவில் விநியோகம் செய்யும் 'யோர்க் சினிமாஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
