தமிழ்நாட்டில் மட்டும் இப்படி ஒரு சாதனையை செய்த ஜன நாயகன்!

 
Jana Nayagan

தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகனை கடந்த ஜூலை 23-ஆம் தேதி ரசிகர்களுக்காகவே கமர்ஷியலாக கொடுத்து அப்ளாஸ் வாங்கி வருகிறார்.

இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து மெகா ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான். ஆனாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியும், விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு செட் ஆகும் வகையிலும் ஸ்கிரிப்ட் பண்ணி விட்டார் இயக்குநர் வினோத்.

விஜய்யின் ரசிகர்கள் தாண்டி, மற்ற ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக முடிந்த வரை முன்னேறி வருகிறது.

அந்த வகையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி கல்லா கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆல்ரெடி லீக்காகி பலபேர் பார்த்த படத்துக்கு இப்படி ஒரு வசூலை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

From Around the web