வெளியானது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் 'THE TRUE LEADER' பாடல்!
Jul 22, 2026, 22:03 IST
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் திரையுலக வாழ்வில் அவருக்கு கடைசி படமாக அமைந்திருக்கிறது 'ஜன நாயகன்'. இந்த படம் உலகமெங்கும் இருக்கும் 'தளபதி'-யின் ரசிகர்களுக்காக நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், ஶ்ரீநாத், சுனில், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஆல்ரெடி இதன் ஐந்து பாடல்கள் வெளியாகி விட்டது. தற்போது, 'The True Leader' என்ற புதிய பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
