கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்?

தமிழக முதல்வரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளிவர உள்ளது ஜனநாயகன்.  ஹெச். வினோத் இயக்கியுள்ள
 
jananayagan

தமிழக முதல்வரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளிவர உள்ளது ஜனநாயகன்.  ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது. இப்படம் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பே அதாவது கடந்த பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் ஏனோ தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவது தாமதமானது. ஒரு வழியாக தற்போது தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதால் வரும் 23ம் தேதி ஜனநாயகன் உலகமெங்கும் வெளியாகிறது.

விஜய் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இதுவரை முன்பதிவில்  மட்டுமே ரூ. 3.86 கோடிக்கு புக்கிங் ஆகியுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இன்னும் இது அதிகரிக்கும் என்றே தெரிகிறது.  

இந்த நிலையில் ஜனநாயகன் முதல் நாள் வசூலில் ரஜினி நடித்த கூலியை முற்றியடிக்குமா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினியின் கூலி முதல் நாள் ரூ. 151 கோடி வசூல் ஆனது. விஜய் நடித்த லியோ முத நாள் ரூ 149 கோடி வசூல் செய்தது. அதனை கூலி முறியடித்தது. தற்போது இந்த சாதனையை ஜனநாயகன் முறியடிக்குமா என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

From Around the web