Categories: Cinema News latest news

எண்ட் கார்டே கிடையாதா?.. விஜய் அமைதியாக இருப்பது ஏன்?.. அங்கேயும்  ‘தல’ தான் நிக்காரு..

இப்பொழுது பெரும் பிரச்சினையாக தமிழ் சினிமாவில் பேசப்படுவது விஜய் சூப்பர் ஸ்டாரா இல்லையா என்பது தான். வாரிசு படத்தில் நடிச்சாலும் நடிச்சாரு அந்த படத்தின் மூலம் ஆரம்பமானது தான் இந்த பேச்சு. தில் ராஜு தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் என்று சொன்னது, சரத்குமார் விஜயை பலபேர் கூடிய மேடையில் சூப்பர் ஸ்டார் என்று சொன்னது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ajith vijay

ஆனால் இதை பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார் விஜய். இது தான் இன்னும் விஜய் மேல் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. மேலும் ஒரு பேட்டியில் நடிகர் சதீஷ் கூறும் போது கத்தி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் அவரிடம் ‘இளைய தளபதி’ என்ற படத்தில் தளபதியை மட்டும் தான் வைத்துக் கொள்ளப்போவதாக கூறினாராம்.

இதையும் படிங்க : தளபதி – 67 கதையை காத்துல பறக்கவிட்ட மிஷ்கின்!.. டென்ஷனான விஜய்.. அதிருப்தியில் லோகேஷ்..

காரணம் வயதாகிக் கொண்டே போவதால் இளைய என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு தளபதி என்ற பட்டத்தை மட்டும் வைத்துக் கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்துப்படி ஏதாவது ஒரு பட்டத்திற்கு ஆசைப்படுகிறவராகத்தான் இருக்கிறார் விஜய் என்று தெரிகிறது.

ajith vijay

மேலும் நடிகர் ஆனந்த்ராஜும் இந்த சர்ச்சைகளுக்கு தீர்வு சொல்வதாக கருதி நிரூபர்களிடம் மாட்டிக் கொண்டார். விஜய் எப்பொழுதும் மேடையில் பேசும் போது ஒருவர் அடையாளத்தை இன்னொருவர் எடுக்க முடியாது, மற்றவர்களுக்கு அடையாளமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறும் விஜய் எப்படி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவார் என்று ஆனந்த் ராஜ் கூற

குறுக்கீட்டு பேசிய நிரூபர் விஜய் ஆசைப்படவில்லை என்றால் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்? அப்போ அந்த பட்டம் பிடிக்க போய்தானே மௌனம் காக்கிறார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆனந்த்ராஜ் சரிதான், விஜய் கண்டிப்பாக அதற்கான கருத்தை தெரிவிப்பார் என்று மழுப்பலாக பதில் கூறினார். இப்படி ஒரு பட்டத்திற்கு விவாதமேடையே நடந்து கொண்டிருக்க நடிகர் அஜித் எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை என்று கெத்தாக நிற்கிறார் என்று அஜித்தை பெருமையாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

vijay

Published by
Rohini