விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹேக்டே உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. டாக்டர் படம் போலவே பீஸ்ட் திரைப்படமும் பிளாக் காமெடி வகை படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் விஜய்க்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, இயக்குனர் நெல்சனை விஜய் கட்டிப்பிடித்து அன்பை காட்டும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பூஜா ஹேக்டேவும் தனது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது எனக்கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது விஜயின் காட்சிகளும் முடிக்கப்பட்டு விட்டது. எனவே, விரைவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயை நெல்சன் கட்டியணைத்து விடை கொடுத்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…