×

தளபதி விஜய்யின் சொகுசு கார்... வக்கீல் எடுத்த அதிரடி முடிவு.. அட என்னதாம்பா நடக்குது...

விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறியதாவது "விஜய் வரிவிலக்கு உரிமை தான் கோரினார். அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை.
 
Vijay

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2012-ல் தான் வாங்கிய காருக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக வரி செலுத்திய நிலையிலும் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது.

மேலும் நுழைவு வரி கட்ட விலக்கு கேட்டதால் இந்த வழக்கில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த விஷயம் கடந்த இரண்டு நாட்களாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. 

இதனிடையே தற்போது விஜய்யின் தரப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறியதாவது "விஜய் வரிவிலக்கு உரிமை தான் கோரினார். அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை.

இந்த விவகாரம் வேறுவிதமான வாதங்களாக உருவாக்கியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பில் சில ஆட்சேபகரமான கருத்துகள் உள்ளன. அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News