Categories: Cinema News latest news

பட்டு கம்பளம் விரிக்கும் கேரளா…விஜயை வைச்சு செய்யும் தமிழ்நாடு… ஏங்க இப்டி?

Vijay Leo: விஜயின் லியோ படத்தின் மீது தற்போது பலரின் கண்ணும் இருக்கிறது. கிட்டத்தட்ட இன்னும் 40 நாட்களுக்குள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் விநியோக விவரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் சில சுவாரஸ்ய தகவலும் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் தான் லியோ. இப்படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 450 கோடிக்கும் அதிகமாகி இருக்கிறது. காரணம் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் லோகேஷ். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயின் கூட்டணி தான்.

இதையும் படிங்க: லியோ படம் ப்ளாப் ஆகணும்.. இல்ல விஜயிக்கு தான் கஷ்டம்… என்னங்க தலைகீழா சொல்றீங்க!

வெறித்தனமாக விக்ரம் வெற்றியை தொடர்ந்து உருவாகும் இப்படத்தின் முதல் க்ளிம்ஸே பலரிடத்திலும் நல்ல ரீச்சை கொடுத்தது. அடுத்ததாக தொடர்ச்சியாக பல அறிவிப்புகள் வாவ் சொல்ல வைத்தது. பல வருடம் கழித்து இணைந்திருக்கும் த்ரிஷா விஜய் ஜோடி.

இரண்டாம் இன்னிங்ஸில் பட்டைய கிளப்ப தயாராகி இருக்கும் அர்ஜூனின் கொலமாஸ் எண்ட்ரி என படத்தின் ரிலீஸுக்கு இப்போதே ரசிகர்கள் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிகள் கேட்டு படக்குழு அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதையும் படிங்க: ஆப்பு வைக்க யாரும் வேணாம்… நீங்களே போதும்.. வெங்கட் பிரபுவால் கடுப்பான தளபதி!

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஜெய்லர் படத்துக்கு அதிகாலை ரிலீஸ் இல்லாத போது லியோவிற்கு கொடுக்க வாய்ப்பே இல்லை. 11.30 காட்சியில் இருந்து தான் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஆச்சரியமாக கேரளாவில் லியோவிற்கு அதிகாலை காட்சிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து கூட்டம் கேரளாவிற்கு படையெடுக்கும் எனத் தெரிகிறது. லண்டன், இங்கிலாந்தில் லியோ படத்துக்கு எந்த கட்டும் கொடுக்கப்படாது. கண்டிப்பாக முழுதாகவே ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இனி தான் லியோ சென்சார். அதில் என்ன அதிர்ச்சி நடக்கும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Shamily