vijay
GoatMovie: விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு மோசமான ரெக்கார்டை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இடையே நேற்று திரைக்கு வந்தது. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்
பொதுவாக விஜயின் திரைப்படங்கள் பாடல் ரிலீசிலிருந்து உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் முதல் பாடல் வெளியீட்டிலிருந்து ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. எல்லா பாடல்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்தது.
vijay
இருந்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை வெங்கட் பிரபுவின் ட்ரெய்லர் மிகச் சிறப்பாக கையாண்டது. பெரிய பரபரப்புக்கு இடையே படக்குழு தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தது. அவர்கள் கொடுத்த பில்டப்பின் பேரில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்
ஆனால் நேற்று வெளியான திரைப்படம் பல விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றமாக தான் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் மட்டுமே 27 கோடி தான் எனக் கூறப்படுகிறது. இது விஜயின் மற்ற திரைப்படங்களை விட ரொம்பவே கம்மியானது தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட இந்திய அளவில் திரைப்படத்தின் வசூல் நூறு கோடியை கூட தொடவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவலாக வெளியாகி இருக்கிறது. விஜயின் சினிமா கேரியர் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இது அவருக்கு மோசமான திரைப்படமாக அமைந்திருப்பதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…