Categories: Cinema News latest news

அஜித்துக்கு என்ன ஆச்சு பதறிய விஜய்!.. உடனடியா என்ன பண்ணாரு தெரியுமா.. போட்டியெல்லாம் சினிமாவுல தான்!

நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட தாக தகவல்கள் வெளியான நிலையில் யுவன் சங்கர் ராஜா முதல் சமுத்திரக்கனி வரை பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

சினிமாவில் என்னதான் விஜய் அஜித் போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்களாகவே பல வருடங்களாக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். தனது நண்பருக்கு என்ன ஆனது எனக்கு முதலில் பதறியது நடிகர் விஜய் தான் என்றும் உடனடியாக சந்திக்க வருகிறேன் என்றும் கேட்டுள்ளாராம்.

இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ்க்கு இப்படி ஒரு சோதனையா?!.. இவ்ளோ ஹிட் அடிச்சும் யூஸ் இல்லாம போச்சே!..

ஆனால் சிகிச்சை முடிந்து ஓய்வு தேவைப்படும் நிலையில், இப்போதைக்கு வேண்டாம் என ஷாலினி சொல்ல போன் மூலம் நடிகர் அஜித்துடன் விஜய் பேசி நலம் விசாரித்து இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜானில் பல மாதங்கள் சூட்டிங் செய்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாகத்தான் நடிகர் அஜித் சென்னை திரும்பினார் என்றும் அதற்கான சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் உள்ள கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணம் அடைந்திருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இவ்வளவு நாளா மறைஞ்சிருந்த கருப்பு ஆடு.. ‘விடாமுயற்சி’ டிலே ஆனதுக்கு காரணமே அவர்தானாம்!..

நடிகர் விஜய் நேற்று தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் செயற்கை காண செயலியை அறிமுகப்படுத்தி இருந்தார். ஒரே நாளில் சுமார் 30 லட்சம் பேர் விஜய் கட்சியில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோட் படத்தை முடித்துவிட்டு, எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தின் நடிகர் விஜய் நடிக்கப் போகிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்தின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் போன் போட்டு நலம் விசாரித்து இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது

Saranya M
Published by
Saranya M