×

விஜய் மல்லையா, நீரவ் மோடி ; 50 பேரின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : கொந்தளித்த நெட்டிசன்கள் 

நாடே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட 50 பேரின் ரூ.68 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கொரோனா விவகாரத்தால் இந்தியாவே முடங்கியுள்ளது. பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. எனவே, மொத்த பொருளாதாரமும் ஸதம்பிஸ்த்துள்ளது.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த விஜய் மல்லையா(1943 கோடி), நீரவ்மோடி, மெகுல் சோக்‌ஷி(8048 கோடி), சந்தீப் (4314 கோடி) உள்ளிட்ட 50 பெரும் பணக்காரர்கள் வங்கியில் கடனாக பெற்ற ரூ.68 ஆயிரம் கோடியை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ந்த 50 பேரில் அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 6 பேர் வைரம் மற்றும் நகை தொழில்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் இங்கிலாந்திற்கு தப்பி ஓடி அங்கிருந்து வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததும் பாஜக அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News