Categories: Cinema News latest news

மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

Vijay: சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் மொத்த அன்பையும் பெற்ற நடிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் படம் மிகப்பெரிய சாதனையை பெற்றிருக்கிறது.

5 நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடி வரை கலெக்ஷனை அள்ளியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக போற்றப்படும் விஜய் அடுத்ததாக அவருடைய 69ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் அந்தப் படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தில் ஓவராக தலையிடும் மாமியார்… இப்படிலாம் செய்யலாமா? ஜெயம்ரவி விவாகரத்து பின்னணி

ஆனால் அதைப் பற்றியும் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் 99 சதவீதம் 69 வது படத்தை எச் வினோத்தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது .அதன் பிறகு முழுமூச்சாக அரசியலில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார் விஜய்.

69 ஆவது படம் தான் அவருடைய கடைசி படமாகவும் இருக்கும். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போவதாக விஜய் அறிவித்திருக்கிறார் .அதனால் அந்த கடைசி படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படமாகவும் அரசியல் சார்ந்த படமாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஜீவாவுக்கு நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை!.. கொளுத்திப்போட்ட சுசித்ரா!…

இந்த நிலையில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகுதான் விஜய் தன்னுடைய மாநாட்டை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்த மாதம் 23ஆம் தேதி மாநாட்டிற்கு போலீஸ் அனுமதியும் தமிழக அரசு அளித்திருந்தது. ஆனால் திடீரென மாநாட்டின் தேதி தள்ளி போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக விஜய் அவருடைய எந்த ஒரு அரசியல் விழாவானாலும் அதாவது மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் சமீபத்தில் நடந்த கட்சிக்கொடி அறிவிப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மும்பையில் இருந்து தான் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாம்.

இதையும் படிங்க: 2024ல் தமிழ் படங்கள் தவறவிட்டதை தட்டி தூக்கிய கோட்… ஒத்த ஆளு போதும்!

அதைப்போல தான் அவர் நடத்தப் போகும் மாநாட்டிற்கும் மும்பையில் இருக்கும் ஒரு டீம்தான் இந்த விழாவை வழிநடத்த போவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் மாநாடு நடத்த திட்டமிட்டு அதே தேதியில் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஒரு விழா நடத்தப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

அது ஒரு வேளை வெளிநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடாக கூட இருக்கலாம் என்றும் தெரிகிறது .அதனால் அதே தேதியில் விஜய் அவருடைய மாநாட்டை வைத்தால் பெரும் சிக்கலாக இருக்கும் என கருதியே தன்னுடைய மாநாட்டின் தேதியை தள்ளி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இரு தினங்களில் விஜய் எப்பொழுது அரசியல் மாநாட்டை நடத்தப் போகிறார் என தெரியவரும்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini