">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்ன நண்பா ரெடியா? -நாளை வெளியாகும் மாஸ்டர் முக்கிய அறிவிப்பு…
என்ன நண்பா ரெடியா? -நாளை வெளியாகும் மாஸ்டர் முக்கிய அறிவிப்பு…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாஸ்டர்’. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ’ஈஸ்வரன்’, ’சுல்தான்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டது. ஆனால், பெரும்பாலான திரையரங்கங்களை மாஸ்டர் படமே எடுத்துக்கொள்ளும் என்பதால் மற்ற படங்கள் வெளியாவது இன்னும் உறுதியாகவில்லை.சமீபத்தில், தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை படக்குழு இன்று அறிவித்துள்ளது. ஆனாலும், படக்குழுவினரால் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மாஸ்டர் ரிலீஸ் தேதி பற்றி நாளை மதியம் 12.30 மணியளவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இது பொங்கல் ரிலீஸ் தேதி அறிவிப்புதான் என விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
Olikkum per ondru arangame adhira vaikum!
Thadukkum kaalam thaandi adhu paravi nirkum!
Nanba, massive release update tomorrow at 12.30pm. Get ready! #MasterUpdate #Master pic.twitter.com/IzADAJJOUF
— XB Film Creators (@XBFilmCreators) December 28, 2020