×

வித்தியாச விஜய்.. மிரட்டல் சேது.. மாஸ்டர் படத்தின் ஸ்பெஷல் ஷோ எப்படி இருந்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `தளபதி’ விஜய் நடித்திருக்கும் `மாஸ்டர்’படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. 
 

கொரோனாவால் தமிழகத்தில் கடந்த ஓராண்டாகக் கிடைக்க வேண்டிய வெற்றி மாஸ்டரால் சாத்தியமாகியுள்ளது எனலாம். அனைத்து சென்டர் ஆடியன்ஸ்களையும் வசீகரிக்கும் விஜய்யின் மேஜிக்கை லோகேஷின் கைவண்ணத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று கூறலாம். 

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வாத்தியாகச் செல்லும் விஜய்யின் ஓபனிங் ஃபைட் சீனும் டான்ஸும் ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளுகிறது. வில்லத்தனத்தில் விசே பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளின் பின்னணி, அதனால் கிரிமினல் கேங்கின் செயல்பாடு என டீடெய்லாகவே திரைக்கதையைப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். 

பின்னணி இசை, கேமரா என டெக்னிக்கலாக மிரட்டும் இந்த மாஸ்டர் ஃப்ர்ஸ்ட் ஹாஃபில் பஞ்ச் பேசவில்லை என்றாலும், செகண்ட் ஹாஃபில் பஞ்ச் மற்றும் மாஸ் காட்சிகளால் மிரட்டுகிறார். ஹீரோயின் மாளவிகா மோகனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும், அவர் வரும் காட்சிகள் ஃபிரெஷ்ஷாக இருக்கின்றன. அதேபோல், இத்தனை வருடங்களில் காட்டப்படாத புதிய பரிமாணத்தில் விஜய்யைக் காட்டியதற்கு இயக்குநர் லோகேஷைப் பாராட்டலாம். விஜய்யும் அவரது மேனரிசமும் ரசிகர்களுக்கு புதிய ட்ரீட் கொடுக்கும் என்று நம்பலாம். ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. விஜய் சேதுபதியின் வில்லத்தனம் மிரட்டுகிறது. தமிழ் சினிமாவுக்குத் தேவையான முக்கியமான பிரேக்கைக் கொடுத்ததற்காக இந்த மாஸ்டருடன் கைகுலுக்கலாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News