×

விஜய  விட விஜய் சேதுபதிய காட்டுறப்போ தான் கைதட்டல் அதிகம்.. பங்கம் செய்யும் ரசிகர்கள் #MasterDisaster

மாஸ்டர் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் ட்விட்டரை அக்கிரமித்து வருகிறது.
 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து இருக்கும் படம் மாஸ்டர். மாளவிகா நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாகி இருக்கிறார். இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தளபதி படம் என்பதையும் தாண்டி பல மாத இடைவேளைக்கு பின்னர் திரையரங்கில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம். இதனால் கூட்டம் அதிகம் என எதிர்பார்க்கப்பட்டது. 
தொடர்ந்து, இன்று வெளியான படத்திற்கு ஏகத்துக்கும் வரவேற்பு நிலவியது. இருந்தும் படத்திற்கு பெரிய அளவிலான நெகடிவ் விமர்சனங்களும் நிலவியது. இதனால், #MasterDisaster என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதில் பல ட்வீட்டுகள் விஜயை கலாய்க்க அஜித் ரசிகர்களும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


 

பெரும்பாலும், விஜய் படங்கள் வெளியாகிய அன்று சம அளவில் எதிர்ப்பும் நிலவும் என்பதால் இது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

null


மேலும், ஒரு படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒருவருக்கு கதாபாத்திரம் மாஸா இருக்கும். இந்த படத்தில் அந்த லக் விஜயிற்கு கிடைக்காமல் விஜய் சேதுபதி தட்டி சென்றதால் அவரின் காட்சிக்கு பெரிய அளவிலான அப்ளாஸ் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறதாம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News