Categories: Cinema News latest news

அரசியலுக்கு ரெடியாகும் விஜய்… முக்கிய தலைவருடன் ரகசிய சந்திப்பு… கதை இப்படி போகுதா??

விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் “வாரிசு” படத்துடன் மோதுவதால் ரசிகர்கள் வெறித்தனமாக இத்திரைப்படங்களுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Vijay

விஜய் பல வருடங்களாக அரசியலில் களமிறங்குவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்புகூட பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாக தகவல் வெளிவந்தது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதை குறித்து தனது நிர்வாகிகளுடன் விஜய் கலந்துரையாடியதாக கூட செய்திகள் வெளிவந்தன.

Vijay

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அரசியல் தலைவரை சமீபத்தில் விஜய் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் அரசியல் குறித்து கலந்துரையாடி இருக்கிறாராம் விஜய்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பார்த்து டிரெண்டை மாற்றிய சந்தானம்… ஓஹோ!! இதுதான் விஷயமா??

Vijay

மேலும் அந்த அரசியல் தலைவருடன் விஜய் பேசியபோது ஒன்றிய அரசின் மீது மிகப்பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். அதே போல் 2024 ஆம் ஆண்டு வருகிற மக்களவை தேர்தலிலேயே விஜய் போட்டியிடப்போவதாகவும் கூறினாராம்.

இதனை தொடர்ந்து அந்த அரசியல் தலைவரிடம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் பூத் கமிட்டியை மிக உறுதியாக அமைத்துள்ளதாகவும் கூறினாராம். இந்த தகவலை பார்க்கும்போது கூடிய விரைவில் விஜய் அரசிலில் பிரவேசிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Arun Prasad
Published by
Arun Prasad