விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் திரைப்படம் இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கத்தில் வெளியான படமாகும். இந்த படத்தின் மூலம் தான் உதவி இயக்குனராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஸ்கின். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.
ஆனால் அதுவரை மிஸ்கின் விஜய் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். அப்போது விஜயே என்ன மிஸ்கின் பேசவே வரமாட்டிக்கீங்க என்று கேட்டாராம். அதற்கு மிஸ்கின் ” ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் எழுதி அதன் பின் உங்களை சந்திக்க வருகிறேன்” என்று கூறினாராம்.
யூத் படத்திற்கு பிறகு முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்ற படத்தை மிஸ்கின் இயக்குகிறார். அந்த படத்தின் ப்ரிவியூவை விஜய் முதன் முதலாக பார்த்தாராம். பார்த்து விட்டு மிஸ்கினின் கழுத்தை பிடித்து படம் சூப்பராக இருக்கிறது. இந்த மாதிரி கதையுள்ள படமாக இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னாராம்.
அப்போது மிஸ்கின் இந்த படமே உங்களுக்காக எழுதிய படம் தான் என்று கூற மீண்டும் கழுத்தை பிடித்து ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை என்று கேட்டாராம். வந்து சொல்லியிருப்பேன். கதையை கேட்டதும் உங்கள் அப்பா 50% கதையை மாற்றி விடுவார். நீங்களும் பாதி கதையை மாற்றிவிடுவீர்கள். மீதி கதையை வைத்துக் கொண்டு நான் தற்கொலைதான் பண்ணியிருப்பேன் என்று கூறினாராம். அதன் பின் தான் நரேன் இந்தப் படத்தில் நடித்து படம் அமோக வெற்றி பெற்றது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…