Leo Second single: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த முக்கிய தகவலை ஒருவழியாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். அதுவும் லோகேஷுக்கே இது புதுசு தானாம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. மாஸ்டர் பின்னர் இணைந்து இருக்கும் இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தின் முன் வியாபாரமே 450 கோடியை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் 30ந் தேதி நடக்க இருந்த நிலையில், திடீர் அறிவிப்பாக படக்குழு நிகழ்ச்சியையே ரத்து செய்தது. இதனால் விஜய் ரசிகர்கள் செம அப்செட் மோடுக்கு சென்றனர். இந்நிலையில் லியோ செகண்ட் சிங்கிள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் தன்னுடைய படங்களை பாடல்களை பெரும்பாலும் விரும்பவே மாட்டார். மாஸ்டர் படத்தில் கூட விஜயிற்காக ஒரு குத்து பாடலும், சிட்சுவேஷன் ஒன்றும் தான் வைப்பார். அதனால் லியோ படத்தில் இரண்டாம் சிங்கிள் விஜய், த்ரிஷாவுக்கான டூயட் பாடல்களாக இருக்கும் என்றே நம்பப்பட்டது.
இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
ஆனால், லியோ படத்தின் இரண்டாம் சிங்கிள் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் அப்பாடலின் ப்ரோமோ வீடியோவை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. அது இருவருக்குமான காதல் பாடலாக இல்லை. விஜயிற்கான மாஸ் பாடலாக அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால், ஜெய்லர் படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய காக்கா, கழுகு கதை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காக்கா தான் விஜய் என விமர்சித்தனர். இதனால் விஜய் ஆடியோ ரிலீஸில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி ரத்து ஆனது. இதனால் செகண்ட் சிங்கிளில் சில பதிலடி லைன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…