Categories: latest news throwback stories

அந்தப் படத்துக்குப் பிறகு வில்லன் வேடத்துல விஜய் நடிக்காததுக்கு என்ன காரணம்?

எல்லா நடிகர்களுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு கண் இருந்துக்கிட்டே இருக்கும். எல்லா முன்னணி கதாநாயகர்களும் வில்லன் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் எல்லாரும் நடிக்க ஆசைப்படுற வில்லன் கதாபாத்திரத்துல நீங்க ஏன் தொடர்ந்து நடிக்க மாட்டேங்குறீங்கன்னு விஜயைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்.

Also read: அஜீத் ரசிகர்களை சுண்டி இழுத்த கோட்… பிரபலம் சொன்ன அந்தத் தகவல்

‘வில்லன் வேடத்துல நடிக்கிறதுக்கு மற்ற கதாநாயகர்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கோ அதே மாதிரி ஆசை எனக்கும் இருக்கு. அதனால தான் பிரியமுடன் படத்துல அப்படி ஒரு வேஷத்துல நடிச்சேன். ஆனா அது எங்க அம்மாவுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல.

இனிமே இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க வேணாம்னு அன்னைக்கே எங்க அம்மா சொன்னாங்க. அதை ஏத்துக்கிட்டுத் தான் அதுக்குப் பின்னால நான் எந்தப் படத்திலும் வில்லன் வேடத்துல நடிக்கல.

priyamudan

இன்னும் சரியா சொல்லணும்னா பிரியமுடன் படத்துக்குப் பின்னாலே வில்லன் வேடத்துல நடிக்க எனக்குப் பல வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் நான் மறுத்ததுக்குக் காரணம் அம்மா தான்’னு ஒரு பேட்டியிலே பதிவு செய்திருக்கிறார் விஜய். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1998ல் விஜய், கௌசல்யா உள்பட பலர் நடித்துள்ள படம் பிரியமுடன். இப்படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவருக்கு இது தான் முதல் படம்.

தேவாவின் இசையில் ஆகாச வானில், பாரதிக்கு கண்ணம்மா, ஹெல்லோ மாருதி, மௌரியா மௌரியா, பூஜாவா மனிஷாவா, வைட் லகோன் கோழி ஆகிய பாடல்கள் உள்ளன. படத்தைத் தயாரித்தவர் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோட் படத்திலும் ஒரு விஜய் நெகடிவ் ஷேடில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v