தளபதி விஜய் தனது திரைப்படங்களில் நடிப்பது , அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள், அடுத்து தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவது இத்தனையும் தாண்டி தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் இணைப்பில் இருப்பார் விஜய்.
தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் எப்போதும் இணைப்பில் இருப்பார். இவருடைய அனுமதி இன்றி எந்த முக்கிய நகர்வும் ரசிகர் மன்றத்தில் நிகழாது. அதே போல, தனது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளின் முக்கிய திருமண நிகழ்ச்சி, மற்றவைகளில் முடிந்த வரையில் நிச்சயம் கலந்து கொள்வார்.
இதையும் படியுங்களேன் – பட்டாம்பூச்சியாய் பறக்கும் சிவசாமி மனைவி.! உங்கள இப்டி எதிர்பார்க்கல.!
இவர் தனது விஜய் மக்கள் இயக்க முக்கிய தலைமை நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் திருமணத்திற்கு வந்திருந்தார். தற்போது புஸ்ஸி ஆனந்த் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு சிறு பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியபடி, நடிகர் விஜய் கலர்புல்லாக இருக்கிறார்.
பீஸ்ட் படத்தில் என்ன கெட்டப்பில் இருந்தாரோ, தளபதி 66 பட அறிவிப்பில் எப்படி இருந்தாரோ அப்படியே இதிலும் இருக்கிறார். கொஞ்சம் கூட மாறவில்லை. புஸ்ஸி ஆனந்த் இந்த போட்டோவை பகிர்ந்தவுடன் காட்டுத்தீ போல இணையத்தில் பற்றிக்கொண்டது தளபதி ஃபீவர். இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த புகைப்படம் தான் ட்ரெண்டிங் போல.
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…
தனுஷ் நடித்த…