Connect with us

latest news

விஜய் நடித்திருந்தால் நான் சிக்கிருப்பேன்.! பொதுவெளியில் உளறிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!

குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களின் ரசனைக்கேற்ற கதைகளை எடுத்து அதனை சுவாரஸ்யமாகவும் , கலகலப்பாகவும் சொல்வதில் வல்லவர் இயக்குனர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் , அன்பே சிவம்  என இவரது படங்கள் அனைத்தும் ரசிக்குப்படி சூப்பர் ஹிட்படங்களாக அமைந்துள்ளது.

தற்போதும் அரண்மனை, கலகலப்பு என ஹிட் கொடுத்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தனது திரை அனுபவங்களை எந்தவித திரை மறைவும் இன்றி பகிர்ந்து கொண்டார்.

அப்போது, நான் நாயகர்களை மனதில் வைத்து இதுவரை கதை எழுதியதில்லை. முதலில் எழுதி விடுவேன். பின்னர் அந்த நாயகரை தேடி, அவரிடம் கதை கூறி ஓகே செய்து விடுவேன். அப்படிதான், உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் எழுதி முடித்துவிட்டு கார்த்திக்காக காத்திருந்தேன்.

இதையும் படியுங்களேன் –இவ்வளவு நெருக்கமான விடியோவா.?! ரசிகர்களை கிறங்க வைத்த அனுபமாவின் புதிய அத்யாயம்.!

ஆனால், தயாரிப்பாளர் விஜயிடம் கதை கூறுங்கள் அவரை வைத்து இயக்கி விடலாம் என கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேலையாக அப்போது விஜய் வேறு படத்தில் பிசியாக இருந்ததால், நான் தப்பித்து கொண்டேன். விஜய்-ஐ வைத்து செய்தால் நான் மாட்டிக்கொண்டு இருந்திருப்பேன். பின்னர் கார்த்தி ப்ரீயாக இருக்கிறார் என்று தெரிந்ததும்,

தயாரிப்பாளர் கார்த்தி கால்ஷீட் வாங்கி கொடுத்தார் படத்தை திட்டமிட்டபடி முடித்தேன் படம் பொங்கல் ரிலீசாக வெளியானது. படமும் சூப்பர் ஹிட். அந்த கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடிக்க வேண்டியது. அதில் விஜயை வைத்து அவருக்காக மாற்றினால் சிக்கலாகிவிடும் என வெளிப்படையாக கூறினார்.

மேலும், அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு அறிவுரை கூறினார். முதலில் நல்ல கதை எழுதிவிடுங்கள். அந்த கதைக்கேற்ற நாயகர்களை தேர்ந்தெடுங்கள். நாயகர்களுக்காக கதை எழுதினால், அவர் நடிக்கவில்லை என்றால் சிக்கலாகிவிடும். என பேசினார்.

author avatar
Manikandan
Continue Reading

More in latest news

To Top