Categories: Cinema News latest news

விஜய் முகத்துல நடிப்பு வரல… அந்த சம்பவத்தை இன்னும் பாக்கல.! கழுவி ஊற்றிய பீஸ்ட் பிரபலம்.!

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் டிரைலர், கேஜிஎப்-2 எனும் பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகும்போது மோதும் விஜய் படம் என  பீஸ்ட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் முதல் காட்சியை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு கூட இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். சிலருக்கு படம் பிடித்து போனாலும், பலருக்கு ட்ரைலர் கொடுத்த பிரம்மாண்டத்தை படம் கொடுக்க வில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்படி இருக்க இணையத்தில் பல்வேறு இணைய வாசிகளும் பீஸ்ட் திரைப்படத்தில் இந்த காட்சி எப்படி வந்தது? என்று ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் அந்த படத்தில் நடித்திருந்த மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்களேன் – 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது.! வெங்கட் பிரபுவின் சேட்டைகள்.! பாவம்யா தயாரிப்பாளர்.!

அப்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி கேட்கப்பட்டது,  திரைப்படம் பற்றி கேட்டதுமே அவர் சிரித்து விட்டார். மேலும், ‘இத்திரைப்படத்தில் ஏன்னை தூக்கி கொண்டு எந்தவித முக பாவனையும் இன்றி விஜய் செல்வார். ஒரு பொருளை நாம் தூக்குகிறோம் என்றால் முகத்தில் ஒரு வெயிட்டான பொருளைத் தூக்கி வருகிறோம் என்ற முகபாவனையை காட்ட வேண்டும். ஆனால், விஜய் அப்படி செய்யவில்லை. விஜய் முகத்தில் அப்படி ஒரு எக்ஸ்பிரஷன் இல்லவே இல்லை.’ என்று கூறிய கூறியுள்ளார்.

மேலும், பீஸ்ட் படத்தை பார்த்துள்ளீர்களா? என்று தொகுப்பாளினி கேட்கவே, ‘ இன்னும் அந்த சம்பவத்தை நான் செய்யவில்லை. ஆனால், பீஸ்ட் படத்தை பற்றிய ட்ரோல்களை நான் பார்த்து வருகிறேன்.’ என்று கூறினார் பீஸ்ட் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.

Manikandan
Published by
Manikandan