Categories: Cinema News latest news throwback stories

இந்த விஷயம் விஜய்க்கு சுத்தமா பிடிக்காதாம்.! ஆனால், ரசிகர்கள் இதனை செய்யாம இருக்க மாட்டாங்களே…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர்களில் மிக முக்கியமானவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பல்வேறு திரைபிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரது.பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து வரும் வாரிசு படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. இன்று இரண்டாவது போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தகவல்களை அவரது அம்மா பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், முக்கியமான ஒன்று அவருக்கு பிறந்தநாளை கொண்டாவது பிடிக்காதாம்.

இதையும் படியுங்களேன் ரசிகர்களால் மறக்கவே முடியாத டாப் 5 விஜய் படங்கள்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு சம்பவம்...

முதல் 10 வயது வரை அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்களாம். ஆனால், அதன் பிறகு குறிப்பாக அவரது தங்கை இறந்த பிறகு அதனை அப்படியே விட்டுவிட்டாராம்.  இதனை விஜய் அம்மா ஷோபனா தெரிவித்தார்.

ஆனால், அவரது ரசிகர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்கள். அவரது பிறந்தநாளை தனது பிறந்தநாளை விட சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தான் இருப்பார்கள்.

Manikandan
Published by
Manikandan