
Cinema News
விஜய் எல்லார்கிட்டயும் இப்படித்தான் நடந்துக்குவார்- ஆதங்கத்தில் பேசிய துணை நடிகை… அடப்பாவமே!
விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரை குறித்து பல பேட்டிகளில் கூறும்போது பெரும்பாலும் ஒரே விஷயத்தை கூறுவார்கள். அதாவது விஜய் படப்பிடிப்புத் தளத்தில் மிக அமைதியாக இருப்பார், யாரிடமும் பேசவே மாட்டார் என்பதுதான் அது. விஜய் சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்தே இதே சுபாவத்தோடுதான் இருக்கிறார் என்று பல பிரபலங்கள் கூறியது உண்டு.

ThalapathyVijay
இந்த நிலையில் துணை நடிகையான விநோதினி, “ஜில்லா” திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் நடந்துகொண்டது குறித்து மிகவும் வெளிப்படையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்த காலம் மாதிரி இல்லையே…
“சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சினிமா துறையில் நடந்த ஒரு விஷயம் கூட நமது காலத்தில் நடக்கவில்லையே என தோன்றும்.
ஒரே படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் நடித்துக்கொண்டிருந்தபோது, சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சாருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்தாராம். இது போன்று இப்போது எங்கேயும் நடக்கவில்லையே.
விஜய்யுடன் நடித்த அனுபவம்…
நான் ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்தேன். பல பேட்டிகளில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை கூறுங்கள் என கேட்கின்றனர். ஒன்னுமே கிடையாது. விஜய் காலையில் படப்பிடிப்புக்கு வருவார். எல்லாரிடமும் குட் மார்னிங் என்று கூறுவார்.

Thalapathy Vijay
நாங்களும் குட் மார்னிங் என்று கூறுவோம். நடித்து முடித்தவுடன் அவர் கேரவானுக்குள் போய்விடுவார். நான் என்னுடைய கேரவானுக்கு போய்விடுவேன்” என மிக வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

Vinodhini
நடிகை வினோதினி, “தலைமுறைகள்”, “பிசாசு”, “துப்பறிவாளன்”, “சூரரை போற்று”, “கடல்”, “பொன்னியின் செல்வன்” போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் நாகரீக மனிதர்தானா? கோபத்தில் கொந்தளித்த எஸ்.பி.பி… அப்படி என்ன நடந்தது?