தனது காதல் தோல்வி பற்றி வெளிபடையாக கூறிய விஜய்!
கடந்த 20 வருடங்களாக மார்க்கெட் சரியாத முன்னணி நட்சத்திரமாக மக்கள் மனதில் நின்று கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.
Wed, 23 Dec 2020

இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்பட உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி தொலைக்காட்சிகளில் பல முறை பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட போது, பல சுவாரஸ்ய விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.
அதில் " நான் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன்பின் 12ஆம் வகுப்பிலும், கல்லூரியிலும் காதலித்தேன். எனக்கு காதல் தோல்விகள் இருக்கிறது " என்று கூறியுள்ளார்.