×

எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் ரசிகர்களுக்கு விஜய் கட்டளை..!

தளபதி பிறந்தநாளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாமென நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் பலி எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனால்  பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதி ஜீன் 22 -ம் தேதி தன்னுடைய பிறந்த நாளில் எந்த ஒரு கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News