×

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் - வைரல் வீடியோ!

எஸ்பிபியின் இறுதிச்சடங்கில் தவறி விழுந்த ரசிகரின் செருப்பை எடுத்துக்கொடுத்த விஜய்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.அவருக்காக அனைவருமே பிராத்தித்தனர்.ஆனால் பிராத்த்னைக்கு பலன் கிடைக்கவில்லை. நேற்று அவர் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.

எஸ்.பிபி.யின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் நடிகர் விஜய் நேரில் சென்று எஸ்பிபி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கூட்டத்தில் ரசிகர் ஒருவர் காலனியை தவறிவிட அதை விஜய் தன் கையால் எடுத்து கொடுத்து நெகிழச்செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


From around the web

Trending Videos

Tamilnadu News