கில்லி மட்டுமில்ல!.. செஸ்ஸும் விளையாடுவாரா விஜய்?.. பிரக்யானந்தாவே மிரண்டுட்டாரே!..

 
pragya

தமிழகத்தின் இளம் சதுரங்க நட்சத்திரமும், இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டருமான ஆர். பிரக்ஞானந்தா, நார்வே தலைநகரான ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்த தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், இன்று (08.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணப் பரிசுக்கான காசோலையையும் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, முதலமைச்சர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இடையே நட்பு ரீதியிலான செஸ் போட்டியும் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சரின் ஆட்டத்திறன் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய பிரக்ஞானந்தா, “முதலமைச்சர் விஜய் இவ்வளவு சிறப்பாக செஸ் விளையாடுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவருடைய நகர்வுகள் மிகவும் சுவாரஸ்யமாகவும், சதுரங்கத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருந்தன” என்று பாராட்டினார்.

உலக அரங்கில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டி கௌரவித்திருப்பது, விளையாட்டு வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசு விளையாட்டு துறைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஊக்கமும் ஆதரவும் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

Tags

From Around the web