தளபதி விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பொதுவெளிகளில் தனது அரசியல் கருத்துக்களையும் அவ்வப்போது பதியவைத்து வருகிறார். தனது எதிர்ப்புகளை தனது பேச்சு மூலம் தெரிவித்தும் வருகிறார்.
அவரது படங்களுக்காக நடைபெறும் இசைவெளியீட்டு விழாவிலும், சில விருது நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார். அது மட்டுமில்லாமல், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கம் குழுவினரை, நேரடி அரசியல் களத்திற்கு இறங்க அனுமதி கொடுத்து அதில் கணிசமான வெற்றிகளையும் பெற்றுள்ளார் விஜய் என்றே கூறவேண்டும்.
இதனை எல்லாம் வைத்து விஜய் வருங்காலத்தில் அரசியல் களத்தில் இறங்குவார் என அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. அந்த கேள்விகளும் அவ்வப்போது அவரை துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், அவர் அதில் பதில் கூறாமல் மழுப்பி வந்துள்ளர்.
இதையும் படியுங்களேன் – எல்லாரும் ‘அந்த’ விஷயத்தை பத்தி மட்டும் தான் கேக்குறாங்க.! கடுப்பான வெங்கட் பிரபு.!
இதே கேள்வியை இயக்குனர் நெல்சன் , நேற்று ஒளிபரப்பான விஜயுடனான நேர்காணலில் கேட்டிருப்பார். அதற்கு விஜய் சூசகமாக, நான் சாதாரண விஜயாக இருந்த என்னை தளபதியாக மாற்றியது மக்கள் தான். அதே போல தளபதியாக இருக்கும் என்னை தலைவனாக மாற்றுவதும் மாற்றாததும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. காலம் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. என பதிலளித்தார்.
நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறாமல், தான் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என கூறி வெறும் வாய் மென்று கொண்டிருந்த பலருக்கு அவள் கொடுத்தது போல விஜயின் பதில் அமைந்துவிட்டது. இருந்தாலும், விஜய் தனக்கு தோன்றியதை கூறியதற்கு வாழ்த்துக்கள் தான் கூற வேண்டும்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…