என்னையடா கலாய்க்குறீங்க!.. வரன்டா தமிழ்நாடு ஃபுல்லா!.. விஜயின் மாஸ்டர் ப்ளான்

by Rohini |   ( Updated:2024-12-25 13:45:04  )
vijay
X

vijay

சமீபகாலமாக விஜய் ஊடகங்களுக்கு பெரும் தீனி போட்டு வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் அவர் அரசியல் கட்சியை துவங்கியதில் இருந்து பத்திரிக்கையாளர்கள், யூடியூப் சேல்கள் என அடுத்தடுத்து விஜயின் அசைவுகளை நோட்டமிட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரே காரணம் அவர் சினிமாவில் ஒரு பெரும் ஆளுமையாக இருப்பதால்தான். அதற்கேற்ப விஜயும் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்கிறார்.

நேற்று கூட பெரியாரின் நினைவு நாள் என்பதால் தன்னுடைய வீட்டிலேயே பெரியாரின் சிலையை வைத்து அவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய். மேலும் எம்ஜிஆரின் நினைவுதினமும் நேற்றுதான். ஆனால் விஜய் எம்ஜிஆருக்கு எந்தவித மரியாதையும் செலுத்தவில்லை. ஆகவே இதுபெரும் பேசு பொருளானது. ஏனெனில் அரசியல் என்பது விஜய்க்கு இரண்டாம் பட்சம் தான்.


முதலில் சினிமாதான் அவருக்கு பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. அந்த சினிமாவே பெரும் கடவுளாக பார்ப்பது எம்ஜிஆரைத்தான். அப்படிப்பட்ட எம்ஜிஆரின் நினைவு நாளில் எந்தவித கருத்தும் தெரிவிக்காதது அரசியல் பிரபலங்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. என்னவெனில் எம்ஜிஆர் ஆரம்பித்த அந்த கட்சி இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

ஒரு வேளை எம்ஜிஆர் நினைவு நாளுக்கு எம்ஜிஆரை பற்றியோ அல்லது அவர் ஆரம்பித்த கட்சியை பற்றியோ விஜய் சொல்லும் போது அது அரசியலில் வேறு விதமாக பிரதிபலிக்கப்படும் என்று நினைத்துக் கூட விஜய் அதை தவிர்த்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் வொர்க் ஃபிரம் ஹோம் பார்க்கும் ஒரே அரசியல் தலைவர் விஜய்தான் என்றும் அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.


இது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஜனவரி 27 ஆம் தேதி விஜய் அரசியல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாராம். அது மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் என இந்த தகவலை தாடி பாலாஜி தெரிவித்திருக்கிறார். இனிமேல்தான் விஜயின் அரசியல் வேகம் சூடுபிடிக்க உள்ளது.

Next Story