×

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... விஜய் ரெய்டு செய்தியால் கடுப்பான விஜய்சேதுபதி

சமீபத்தில் விஜய் உள்பட ஒரு சிலர் வீடுகளில் வருமான வரித் துறை அதிரடியாக ரெய்டு நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த ரெய்டின் உள் நோக்கம் என்ன என்பது குறித்து பலர் பல விதமாக பேசி வருகின்றனர்.
 

விஜய்யை அரசியல் ரீதியாக பயமுறுத்த மத்திய அரசு இந்த ரெய்டை பயன்படுத்திக் கொள்வதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் ஒருசில ஊடகங்களில் இந்த ரெய்டுக்கு காரணமே வேறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

பிரபல கல்வி நிறுவனம் நடத்தி வரும் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் தூண்டுதலால் தான் திரையுலகில் உள்ள பலரும் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப் படுவதாகவும் இதற்கு விஜய், விஜய்சேதுபதி உள்பட ஒரு சில முக்கிய நடிகர்கம் உடந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 

பிகில் பணத்தில் கிடைத்த கருப்பு பணத்தின் மூலம் மதமாற்ற வேலைகள் ஜரூராக நடந்து வந்ததாகவும் இதனை கடந்த சில மாதங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய அரசு அதிரடியாக தகுந்த ஆதாரங்களை திரட்டி அதன்பின் விஜய் உள்பட ஒரு சிலரின் வீடுகளில் ரெய்டு நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த செய்தியை படித்து பார்த்து ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ”போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... ” என்று ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News