சிவகார்த்திகேயனின் ரசிகர் செய்த செயல்... இதுக்கு விஜய் என்ன ரியாக்ஷன் கொடுக்கப்போறாரோ!

 
Sivakarthikeyan vijay

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் லிஸ்ட்டில் தான் நம்ம சிவகார்த்திகேயனும் இருக்கிறார். கடைசியாக இவர் நடித்து வெளியான 'பராசக்தி' தோல்வி படமானது.

இப்போது சிவகார்த்திகேயன் 'சேயோன்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

சமீபத்தில், ATMல நகை வருமா? என்று சிவகார்த்திகேயன் நடித்த விளம்பர ப்ரோமோக்களுக்கு விடையாக இன்று சென்னை தி.நகரில் அக்ஷயா தங்க மாளிகை திறந்தாச்சு. இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடி விட்டார்கள்.

சிவகார்த்திகேயன் பேச ஆரம்பிக்க மைக் வாங்குகையில், கூட்டத்தில் இருந்து ஒரு ரசிகர் 'வருங்கால முதல்வர்' என்று கத்தினார். உடனே, சிவகார்த்திகேயன் 'உஷ்' என்று சொல்லி அமைதியாக இருக்குமாறு சைகை காட்டிவிட்டு சிரித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்போது நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web