Categories: Cinema News latest news

விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலி ரெய்ட் பண்ணும் பீஸ்ட் டீம்… வைரல் வீடியோ…..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சாதனை படைத்து வருகிறது.

ஒருபக்கம் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது. பீஸ்ட் தெலுங்கில் வெளியாகிறது என்பதால், சமீபத்தில் பீஸ்ட் படக்குழு ஹைதராபாத் சென்று புரமோஷன் செய்தது. அதேபோல், நேற்று விஜய் – நெல்சன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இந்நிலையில், விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு ஜாலியாக காரை ஓட்டி செல்லும் வீடியோ தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா