Categories: Cinema News latest news

விஜய்யே பார்த்து பயந்த நபர் இவர்தானாம்… கெத்து காட்டும் பிரபல பத்திரிக்கையாளர்… ஓஹோ!

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழும் விஜய், படப்பிடிப்புத் தளத்தில் மிக அமைதியாக இருப்பார் என அவருடன் பணியாற்றியவர்கள் பலரும் கூறுவதுண்டு. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யுடன் தான் பழகியது குறித்தான சுவாரஸ்யமான சம்பவம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

Vijay

விஜய் நடிக்க வந்த புதிதில் அவரது தந்தையான எஸ்.ஏ.சியை பிஸ்மி அடிக்கடி சந்திப்பது வழக்கமாம். அப்போது எஸ்.ஏ.சி, பிஸ்மியிடம், “விஜய் ரொம்ப அமைதியாகவே இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் கூட அவ்வளவாக பேசமாட்டிக்கிறார். நீங்கள் அவருடன் பேசி அவரை ஒரு வழிக்கு கொண்டு வாருங்கள்” என கூறுவாராம்.

அதன் படி பிஸ்மியும் விஜய்யிடம் மிக கேஷுவலாகவும் ஜாலியாகவும் பேசிக்கொண்டிருப்பாராம். ஆனால் அப்போதும் விஜய் மிக குறைவான வார்த்தைகளையே பேசுவாராம். இது குறித்து அப்பேட்டியில் பிஸ்மி பேசியபோது “அவரிடம் நான் மிகவும் ஜாலியாக பேசினேன். ஆனால் முடிவில் நான் மட்டுமேதான் பேசியிருப்பேன் என நினைக்கிறேன்” என்று மிகவும் கலகலப்பாக கூறியிருந்தார்.

Bismi

அதே போல் ஒரு முறை பிஸ்மியின் குழந்தைகள் விஜய்யை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்களாம். அதன்படி தனது குடும்பத்தை ஒருமுறை விஜய்யை பார்க்க அழைத்துக்கொண்டுப்போனாராம்.

அப்போது விஜய் அவரது குழந்தைகளிடம் “உங்க அப்பா பேட்டி எடுக்க வந்தாலே எனக்கு பயமா இருக்கும். ரொம்ப துருவி துருவி கேள்வி கேப்பார். எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கும்” என நகைச்சுவை தொனியோடு கூறுவாராம்.

விஜய் தற்போது அவ்வளவாக பத்திரிக்கை பேட்டிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் விஜய் பத்திரிக்கையாளர்களோடு மிக நெருக்காமாக இருந்திருக்கிறார் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது.

 

Published by
Arun Prasad