சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘டான்’. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்கினார். லைக்கா புரடக்ஷனில் வெளிவந்த இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் டிவி நட்சத்திரங்கள் பலர் நடித்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சிபி சக்கரவர்த்திக்கு இதுதான் முதல் படம். ஏற்கெனவே பல படங்களுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இயக்குனர் அட்லீயின் சிஷ்யன் தான் இந்த சிபி சக்கரவர்த்தி. டான் படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் ரஜினி காந்தும் படத்தை பார்த்து கண்ணீர் மல்க வாழ்த்தினார் இயக்குனரை.
தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் சிபி சக்கரவர்த்தி துணை இயக்குனராக பணிபுரிந்த போது அங்கு நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். எப்பவுமே பட சூட்டிங் முடிந்து ஓய்வு நேரங்களில் விஜய் மற்ற கலைஞர்களோடு சேர்ந்து ஷட்டில் விளையாடுவாராம். அப்படி ஒரு நேரத்தில் தெறி படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி சென்றிருந்த நிலையில் நிவியை ஸ்கூலுக்கு அனுப்புவதில் தாமதமாகும் சீனில் அட்லீ ஒன்னு நினைக்க ஸ்பாட்டில் வேறொன்று நடந்ததாம்.
கடுப்பில் கத்திய அட்லீ புடிச்சு எல்லாரையும் திட்டினாராம். அதே கோபத்தில் மறு நாளும் இருக்க சிபியை தேடிக் கொண்டிருந்தாராம் திட்டுவதற்கு. அந்த சமயம் பார்த்து விஜய் சிபியிடம் ஷட்டில் விளையாட போகலாமா? என்று கேட்டு விட்டு போய்விட்டாராம். இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதி அட்லீயிடம் போய் சிபி விஜய் சார் விளையாட கூப்பிடுகிறார் என்று சொன்னதும் சற்று முறைத்து ஓகே போ என்று சொல்லிவிட்டாராம். நல்ல வேலை தப்பித்து விட்டேன் என்று கூறினார் சிபி.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…