Categories: Cinema News latest news

துணிவு பார்த்து பயந்து ஓடுறவரு நம்ம ஆளு விஜய்!.. இந்த நேரத்துல இது தேவையா?.. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!..

சினிமாவில் தயாரிப்பாளர்களை தவிர மற்ற அனைவரும் கெட்டவர்கள் என்ற நோக்கத்தில் தன் வாயை கொடுத்து அடிக்கடி மாட்டிக் கொள்பவர் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன். மேடைகளில் சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் அனைவரையும் சகட்டு மானக்கி திட்டி பேசுவதில் வல்லவர்.

surya bala

நடிகர், நடிகைகள் என யாரையும் விட்டு வைக்காத வெளிப்படையாக பேசக்கூடிய மனிதர் தான் கே.ராஜன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாலா சூர்யா வணங்கான் படத்தை பற்றி பேசியிருந்தார். அவர் கூறும்போது பாலாவின் மீது தான் தவறு இருக்கும் என்ற மன நிலையிலேயே பேசினார்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் ஃபேஷன் ஐகானாக வலம் வந்த முதல் நடிகை!.. புதிய டிரெண்டை உருவாக்கிய துணிச்சலான நடிகை!…

மேலும் ஒரு வளர்ந்த உச்சத்தில் இருக்கும் நடிகரை இன்னும் பழைய மாதிரியே நடத்தினால் அது நியாயம் இல்லை. முதல் இரண்டு நாள் சூட்டிங்கிலேயே சூர்யா தாறுமாறாக ஓட வைத்தார் பாலா. அதுவும் இல்லாமல் படப்பிடிப்பில் மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசினார் என்றும் கே.ராஜன் தெரிவித்தார்.

surya

ஒரு அந்தஸ்தில் இருக்கும் நடிகரிடம் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார். மேலும் சூர்யா எதிர்பார்ப்பதும் சரியானது தான். செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்த பிள்ளை. தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருக்க முடியும் என்று கருதியே இந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்றும் கூறினார்.

இவர்களை பற்றி பேசும் போதே நடிகர் விஜயின் பேரையும் உள்ளிழுத்தார் கே.ராஜன். செல்வ செழிப்பில் பிறந்த சூர்யா என்று சொல்லும் போது அதே மாதிரி தான் விஜயும். அவர் அப்பா ஒரு அந்தஸ்தில் இருக்கும் போதே பிறந்து வளர்ந்தவர். இவர்கள் எல்லாரும் பணிவுடன் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

vijay

யாரையும் தவறாக பேசக்கூடாது. யார் மனதையு புண்படுத்தவும் கூடாது என்று கூறி ஒரு மனிதனுக்கும் பணிவும் வேண்டும் துணிவும் வேண்டும். துணிவு என்பது யார் தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும். அந்த குணம் நடிகர் சூர்யாவிடம் இருக்கிறது. ஆனால் துணிவு நம்ம ஆளு விஜய் கிட்ட சுத்தமாக கிடையாது என்று கே.ராஜன் சொல்லி முடித்தார்.

இதையும் படிங்க : இயக்குனர் ஷங்கரின் யோசிக்க வைத்த அந்த சென்டிமென்ட் படங்கள்…ஒரு பார்வை

இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது. ஏற்கெனவே துணிவு படத்துடன் வாரிசு படம் மோதும் நிலையில் இந்த துணிவை பற்றி பேசிய கே.ராஜன் பேச்சு தான் டிரெண்ட் ஆகி வருகிறது.

k.rajan

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini