எல்லோரும் ஐடி விங் இருக்கு.. ஒன்னும் பண்ண முடியாது!.. விஜய் சேதுபதி பேட்டி.
நடிகர்களில் ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடிய குணம் கொண்டவர் விஜய் சேதுபதி. விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்கள் தவெக ஆட்சியையும், முதலமைச்சர் விஜயையும் குறிப்பதாக கருதிய தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் விஜய் சேதுபதியை திட்டி தீர்த்தனர்.
ஒருபக்கம் சமீபத்தில் பேட்டியளித்த விஜய் சேதுபதி ‘விஜய் சாரை எனக்கு நடிகராக மட்டுமே தெரியும்.. அரசியல்வாதியாக என்றால் ஆட்சி எப்படி நடக்கிறது? அவர்கள் போடுகிற திட்டங்களை பார்த்துதான் சொல்ல முடியும்.. ஆனால், அதை கவனிக்க எனக்கு நேரமில்லை.. அது என் வேலையும் இல்லை.. முழுமையாக தெரியாமல் கருத்து சொல்ல முடியாது’ என கூறி இருந்தார்..
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் பற்றி பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி ‘விமர்சனங்கள் நம்மை முன்னேற்ற வேண்டும். நம்மை வலிமையானவர்களாக மாற்றும்.. அதில். சிலது முட்டாள்தனமாக இருக்கும். சிலது ஆரோக்கியமானதாக இருக்கும்.. விமர்சனங்கள் இல்லை என்றால் வளர்ச்சி இல்லை.. நாம் என்ன செய்தாலும் பாராட்டுகிறார்கள் என்றால் அது நல்லதல்ல.
எனவே விமர்சனங்கள் இருப்பது நல்லது. சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. இதை தாண்டி பலருக்கும் ஐடி விங்ஸ் இருக்கின்றன. அது ஒருபக்கம் வேலை செய்யும். அதனால் விமர்சனம் இருந்தால் நாம் அனைவரின் பார்வையிலும் இருக்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் கூட்டத்தில் கரைந்து விட்டோம் என்று அர்த்தம்’ என பேசியிருக்கிறார்.
