இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!.. எம்மி விருது வழங்கிய மக்கள் செல்வன்!..

 
vjs

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களை தனக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் எம்மி விருது விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார்.

vjs

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54வது சர்வதேச எம்மி விருது விழாவில்  விஜய் சேதுபதி விருது வழங்கினார். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில், கருப்பு நிற கோட் சூட் அணிந்து தனது மகன் சூர்யா விஜய் சேதுபதியுடன் கலந்துக்கொண்ட அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எம்மி விருது விழாவில் விருதை வழங்கிய முதல் கோலிவுட் நடிகரே விஜய் சேதுபதி தான் என்பது கூடுதல் தகவல். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மகனுடன் சர்வதேச விருது மேடையில் பங்கேற்றது இந்திய ரசிகர்களை மகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் டிசம்பர் 4ம் தேதி மிஷ்கின் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் உடன் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படம் திரைக்கு வருகிறது.

CR  Desk
CR Desk

7951 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web